×

தாஹிர் அதிரடி சதம் ஏசிசி எமர்ஜிங் கோப்பையை வென்றது பாகிஸ்தான் ஏ

கொழும்பு: வளரும் அணிகளுக்கான ஏசிசி ஆண்கள் எமர்ஜிங் கோப்பை ஒருநாள் தொடரில், பாகிஸ்தான் ஏ அணி 2வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. ஆர்.பிரேமதாசா ஸ்டேடியத்தில் நேற்று நடந்த பைனலில் இந்தியா ஏ – பாகிஸ்தான் ஏ அணிகள் மோதின. டாஸ் வென்ற இந்தியா ஏ அணி முதலில் பந்துவீசியது. பாகிஸ்தான் ஏ அணி 50 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 352 ரன் குவித்தது. அந்த அணியின் தய்யப் தாஹிர் 108 ரன் (71 பந்து, 12 பவுண்டரி, 4 சிக்சர்) விளாசினார். சைம் அயூப் 59, சாகிப்ஸதா பர்கான் 65, உமர் யூசுப் 35, முபாசிர் கான் 35 ரன் எடுத்தனர். இந்தியா ஏ பந்துவீச்சில் பராக், ஹங்கர்கேகர் தலா 2, ராணா, சுதர், நிஷாந்த் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

இதையடுத்து, 50 ஓவரில் 353 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய இந்தியா ஏ அணி, 40 ஓவரில் 224 ரன் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது. அபிஷேக் ஷர்மா 61, கேப்டன் யஷ் துல் 39, சாய் சுதர்சன் 29 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் கணிசமாக ரன் குவிக்கத் தவறினர். பாகிஸ்தான் ஏ பந்துவீச்சில் சுபியான் முகீம் 3, மெஹ்ரான் மும்தாஸ், முகமது வாசிம், அர்ஷத் இக்பால் தலா 2, முபாசிர் கான் 1 விக்கெட் கைப்பற்றினர். பாகிஸ்தான் ஏ அணி 128 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்று 2வது முறையாக ஏசிசி எமர்ஜிங் கோப்பையை முத்தமிட்டது. அதிரடியாக விளையாடி சதம் விளாசிய தாஹிர் பைனலின் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

The post தாஹிர் அதிரடி சதம் ஏசிசி எமர்ஜிங் கோப்பையை வென்றது பாகிஸ்தான் ஏ appeared first on Dinakaran.

Tags : Tahir ,Pakistan ,Colombo ,ACC ,Emerging Cup ,ACC Emerging Cup ,Pakistan A ,Dinakaran ,
× RELATED பாக்.கில் தீவிரவாதிகள் தாக்குதல்- 7 பேர் பலி